2025 ஜூலை 17, வியாழக்கிழமை

விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 21 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்களைக் கையளிக்கு நிகழ்வு வியாழக்கிழமை (20) சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீத், விளையாட்டு உத்தியோகத்தர் எம்.வீ.எம்.றஜாய், நிதி உதவியாளர் ஏ.சீ.முஹம்மட், முகாமைத்துவ உதவியாளர் எம்.எம்.சமூன் உட்பட விளையாட்டுக்கழக வீரர்களும் கலந்துகொண்டனர்.

கல்முனை மாநகர பிரதி முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் வேண்டுகோளின் பேரில்; சாய்ந்தமருது ஸ்டார் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவிற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரினால் ஐம்பதாயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதன்போது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் உள்ளிட்ட அதிகாரிகள் ஸ்டார் லீடர்ஸ் விளையாட்டுக் கழக வீரர்களிடம் விளையாட்டு உபகரணங்களை கையளித்து வைத்தனர்.

இந்நிகழ்வில் தமது கழகத்தின் வளர்ச்சியையும் வீரர்களின் விளையாட்டு திறமையையும் கருதிற்கொண்டு விளையாட்டு உபகரணங்களைப் பெற்றுத்தர காரணகர்த்தாகவிருந்த கல்முனை மாநகர பிரதி முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், நிதி ஒதுக்கீடு செய்து தந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் இதனை ஒழுங்கு செய்து தந்த சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், விளையாட்டு உத்தியோகத்தர் எம்.வீ.எம்.றஜாய் ஆகியோருக்கு ஸ்டார் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் றியாத் ஏ. மஜீத் நன்றிகளை தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X