Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Super User / 2014 பெப்ரவரி 27 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
நா.நவரத்தினராசா
வீரர்களின் போர் என வர்ணிக்கப்படும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணிக்கும் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணிக்கும் இடையில் நடைபெற்றுவரும் மட்டுப்படுத்தப்படாத துடுப்பாட்டப் போட்டியில் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணியின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.
நேற்று (26) ஆரம்பமான வீரர்களின் போர் இவ்வருடம் 14 ஆவது தடவையாக நடைபெற்று வருகின்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மகாஜனக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது. எனினும் மோசமான துடுப்பாட்டம் காரணமாக 23.3 ஓவர்களில் 78 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது.
துடுப்பாட்டத்தில் ரி.டிலோசன் 27, ஜே.மயூரன் 18, எஸ்.கபிலன் 09 ஆகிய ஓட்டங்களை பெற்றனர்.
பந்துவீச்சில் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி சார்பாக கே.கே.கதியோன் 5 (16), கே.பிரசாத் 3 (10), பி.சுஜிதரன் 2 (07) இலக்குகளையும் கைப்பற்றினர்.
பதிலுக்குத் தமது முதலாவது இனிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி 46.2 பந்துபரிமாற்றங்களில் 232 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது.
ரி.சரத்குமார் 26 பந்துகளில் எட்டு நான்ங்ஓட்டங்கள், நான்கு ஆறுஓட்டங்கள் அடங்கலாக 77 ஓட்டங்களையும், ஜெ.ஜனக்சன் 67, பி.சுஜிதரன் 32, கே.கே.கதியோன் 27, கே.சயந்தன் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மகாஜனக் கல்லூரி அணியின் ஜெ.ஜனந்தன் 4 (61), ஆர்.ரிஷாத் 3 (38), எஸ்.கஜந்தன் 2 (44) இலக்குகளையும் கைப்பற்றினர்.
154 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இனிங்ஸிக்காகத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மகாஜனக் கல்லூரி அணி, மீண்டும் துடுப்பாட்டத்தில் தடுமாறியது. நேற்று (26) ஆட்டநேரம் முடிவில் 21 பந்துபரிமாற்றங்களுக்கு 04 இலக்குகளை இழந்து 66 ஓட்டங்களைப் பெற்றது.
தொடர்ந்து இன்று (27) இரண்டாவதும் இறுதியுமான ஆட்டம் நடைபெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago