2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அணிகளின் குழப்பத்தால் இறுதிப்போட்டி ரத்து

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 28 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


அளவெட்டி பாரதி விளையாட்டுக்கழகத்தினால் நடத்தப்பட்டு வந்த தாச்சிச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில், அணிகள் மாற்றப்பட்டமையினால் ஏற்பட்ட குழப்பநிலையினால் விருந்தினர் அழைக்கப்பட்டு கோலாகலமாக நடத்த ஏற்பாடாகிய இறுதிப்போட்டி நிகழ்வு கைவிடப்பட்டது.

மேற்படி சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டிக்கு பண்டத்தரிப்பு அறிவொளி விளையாட்டுக் கழகமும் பண்டத்தரிப்பு சாந்தை விளையாட்டுக் கழகமும் தகுதி பெற்றிருந்தன.

இருந்தும், பண்டத்தரிப்பு அறிவொளி விளையாட்டுக்கழக வீரர் ஒருவர் இச்சுற்றுப்போட்டியில் இரண்டு அணிகளுக்கு விளையாடியிருந்தமை போட்டி ஏற்பாட்டாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டு, அவ்வணி இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

இதனால் பண்டத்தரிப்பு அறிவொளி விளையாட்டுக்கழக அணியினை இறுதிப்போட்டியில் விளையாட விடாமல் தவிர்த்து, அதற்குப் பதிலாக அரையிறுதியில் பண்டத்தரிப்பு அறிவொளி விளையாட்டுக்கழக அணியுடன் விளையாடித் தோல்வியடைந்த உடுவில் ஆலடி சிந்து விளையாட்டுக்கழக அணி இறுதிப்போட்டிக்கு அழைக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்;ந்து நேற்று (27) மாலை இறுதிப்போட்டி இடம்பெறுவதாக இருந்த நிலையில் பண்டத்தரிப்பு சாந்தை விளையாட்டுக் கழக அணியினர் தாங்கள் இறுதிப்போட்டியில் பண்டத்தரிப்பு அறிவொளி விளையாட்டுக்கழக அணியுடன் தான் விளையாடுவோம் என்று கூறியமையினால் போட்டி குழப்பமடைந்தது.

இந்தக் குழப்பத்திற்கு யாழ். மாவட்டத் தாட்சிச் சங்க உறுப்பினர்கள் தீர்வு காண முற்பட்ட போதும், அது கைகூடாத நிலையில் இறுதிப்போட்டி நிகழ்விற்கு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X