2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அங்குரார்பண போட்டியில் புனித சூசையப்பர் கல்லூரி வெற்றி

Kogilavani   / 2014 மார்ச் 01 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை  புனித சூசையப்பர் கல்லூரியினர் மறைந்த கல்லூரி அதிபர்களான வணபிதா ஹெபியர், அருட் சகோதரர் அ.சூசைதாசன் ஆகியோரின் நினைவாக சனிக்கிழமை நடத்தப்படும் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் அங்குரார்பண போட்டியில் புனித சூசையப்பர்; கல்லூரி அணியினர் ஸாகிரா கல்லூரியை 5:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.

அழைக்கப்பட்ட பாடசாகைளக்கு இடையே இப்போட்டி ஏகாம்பரம் விளையாட்ட மைதானத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

இதில் புனித சூசையப்பர் கல்லூரி அணியுடன் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயம். ஸாகிரா கல்லூரி, கிண்ணியா அல் அக்ஸ் கல்லூரி, மூதூர் மத்திய கல்லூரி, விபுலானந்தா கல்லூரி, முள்ளிப்பொத்தானை அல் ஹிஜ்ரா வித்தியாலய அணிகள் பங்கு கொள்கின்றன.

செலிங்கோ நிறுவனத்தின் அனுசரணையுடனும்; பொலிஸாரின் ஒத்துழைப்புடனும் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.

புனித சூசையப்பர் கல்லூரி அதிபர் அருட்தந்தை பொன்சியன் அடிகளின் தலைமையில் நடைபெறும் இப்போட்டியில், கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பிரதிபொலிஸ் மா அதிபர் கபில ஜெயசேகர, செலிங்கோ நிறுவனத்தின் உதவி பொது முகாமையாளர் விஜயானந் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X