2025 ஜூலை 17, வியாழக்கிழமை

காத்தான்குடி பிரதேச செயலக இல்ல விளையாட்டு போட்டி

Super User   / 2014 மார்ச் 02 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேச செயலக வரலாற்றில் முதல் தடவையாக இல்ல விளையாட்டு போட்டிகள் காத்தான்குடி கடற்கரையில்  நேற்று (1) நடைபெற்றன.
இந்த விளையாட்டுப் போட்டிகளில் கூகுல் இல்லம் 120 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பெற்றுக் கொண்டதுடன் கலை கலாசார நிகழ்வுகள் இன்று நடைபெற்றது.
இந்த இல்ல விளையாட்டு விழாவில் காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களை கொண்ட கூகுள் மற்றும் யாகு, ஒபேரா ஆகிய மூன்று இல்லங்கள் இந்த இல்ல விiளாயட்டு போட்டியில் பங்கு கொண்டன.
காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த இல்ல விளையாட்டு விழாவில் உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் தலைமையில் ஒபேரா இல்லமும், யாகு இல்லம் உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.கருனாகரன் தலைமையிலும் நிருவாக உத்தியோகத்தர் கே.கோமலேஸ்வரன் தலைமையில் கூகுள் இல்லமும் பங்கு கொண்டன.
இதில் யாகு இல்லம் 110 புள்ளிகளை பெற்று இரண்டாமிடத்ததையும், 86 புள்ளிகளை பெற்று ஒபேரா இல்லம் மூன்றாவது இடத்தினை பெற்றுக் கொண்டது.
இதன் போது விiளாட்டு நிகழ்ச்சிகளுடன் நாடகம், பாட்டு, அறிவுக்களஞ்சியம், நகைச்சுவை அரங்கம், கவிதை ஆகிய கலாசார போட்டிகளும் நடைபெற்றன.
வைபவத்தில் பெண்களுக்கு வேறாகவும் ஆண்களுக்கு வேறாகவும் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X