2025 ஜூலை 17, வியாழக்கிழமை

யாழ். கால்பந்தாட்ட அணிகளுக்கு உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு

Super User   / 2014 மார்ச் 02 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்

யாழ்.மாவட்ட பாடசாலைகளின் கால்ப்பந்தாட்ட அணிகளுக்கு இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தினால் கால்பந்தாட்ட உபகரணங்கள் (பந்துகள்) நேற்று (01) வழங்கப்பட்டன.

யாழ்.மாவட்டப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்று வரும் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளைக் கொண்ட 23 பாடசாலை அணிகளுக்கு தலா 10 பந்துகள் வீதம் வழங்கப்பட்டன.

யாழ்ப்பாண கால்பந்தாட்ட லீக்கின் தலைவர் வெற்றிக்கிண்ண இறுதியாட்டம் மற்றும் சம்பியன் ஓஃவ் சம்பியன் அணிகளுக்கிடையிலான இறுதியாட்டம் ஆகிய போட்டிகள் நேற்று (01) துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற போதே இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்த உபகரணங்கள் வழங்குவதற்கான ஏற்பாட்டினை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் றஞ்சித் றொட்ரிக்கோ மேற்கொண்டிருந்தார்.

யாழ்.மாவட்ட பாடசாலைகளின் கால்பந்தாட்ட அணிகள் தேசிய ரீதியில் தடம் பதிக்கின்ற அணிகளாக அண்மைக் காலங்களில் மாறியிருக்கின்றன. அதிலும் குறிப்பாக மானிப்பாய் இந்து கல்லூரி, இளவாலை ஹென்றியரசர் கல்லூரி மற்றும் சென்.பற்றிக்ஸ் கல்லூரி ஆகிய அணிகள் தேசிய மட்டம் வரையிலும் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளையும் பெற்றிருக்கின்றன.

அத்துடன், புதிய மாற்றமாக பெண்களுக்கான கால்ப்பந்தாட்ட அணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. பெண்கள் அணிகளுக்காக கோட்டமட்டம், வலயமட்டம், மாவட்டப் போட்டிகள் இடம்பெறுகின்றன.

பாடசாலைகளின் கால்ப்பந்தாட்ட அணிகளில் இருக்கும் வீரர்கள் அடுத்த நிலையில் கழகங்களில் விளையாடி தங்கள் ஆளுமையினை வளர்க்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இருப்பதுடன், பாடசாலை மட்ட அணிகளில் விளையாடும் வீராங்கனைகளுக்கு கழகங்கள் ரீதியில் அணிகள் இல்லாதிருப்பது குறையாகவே இருக்கின்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X