2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் கூடைப்பந்தாட்ட சம்பியன்கள்

A.P.Mathan   / 2014 மார்ச் 05 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஒட்டர்ஸ் அகுவாடிக் கழகத்தின் கூடைப்பந்தாட்ட அரங்கில் கடந்த புதன்கிழமை (பெப்ரவரி 26ஆம் திகதி) இரவு மிகவும் உணர்ச்சிகரமானதாகவும் பரப்பரப்பானதாகவும் இடம்பெற்ற அணிக்கு 5 பேர் கொண்ட A பிரிவில் 'மேர்க்கண்டைல் கூடைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்' இறுதிப் போட்டிகளில் கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இரண்டுமே வெற்றிவாகை சூடிக்கொண்டுள்ளன.

DFCC வங்கியுடன் மோதிய கொமர்ஷல் கிரெடிட் ஆண்கள் அணியானது 20 இற்கு 23 புள்ளிகள் என்ற அடிப்படையில் DFCC வங்கி அணியினை வெற்றி கொண்டது. அதே நேரம், ஹற்றன் நஷனல் வங்கியை எதிர்த்தாடிய பெண்கள் அணியானது 17 இற்கு எதிராக 28 புள்ளிகளை குவித்து ஹற்றன் நஷனல் வங்கியை வெற்றி கொண்டது.

கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் ஆண்கள் அணியில் கயான் டி குரூஸ் (தலைவர்), கனிஷ்க, கயான், ஹர்ஷதேவ, சனித்த மற்றும் சுதேஷ் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.

பெண்கள் அணியில் சுலோச்சனா (தலைவி), பிரசாதி, கௌசிகா, குஞ்சனா, விந்தியா, சந்துனிகா, டெவ்னி, சந்துனி மற்றும் துஷானி போன்றோர் இடம்பெற்றிருந்தனர்.

இவ்விரு அணிகளுக்கும் பந்துக ரணசிங்க பயிற்சிகளை அளித்திருந்தார்.

கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் ஆண்கள் அணியாலும் பெண்கள் அணியாலும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க இந்த இரட்டை வெற்றியானது, இலங்கையின் கூடைப்பந்தாட்ட விளையாட்டுத் துறையில் நிகழ்த்தப்பட்ட முக்கியவத்துவம் வாய்ந்த ஒரு சாதனை என்று பாராட்டப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X