2025 ஜூலை 17, வியாழக்கிழமை

றிட்ஸ்பரி சம்பியன் கிண்ணம்; ஷனிகா தெவ்மினி மற்றும் உதந்த பண்டார வசம்

A.P.Mathan   / 2014 மார்ச் 05 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முதற்தர சொக்லட் வர்த்தகநாமமான றிட்ஸ்பரி, தொடர்ந்து 8வது ஆண்டாக 14ஆவது சர்வதேச பாடசாலைகளுக்கிடையிலான தடகள சம்பியன் போட்டிகளுக்கு (ISAC) அனுசரணை வழங்கியுள்ளது. அண்மையில் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியானது 25 சர்வதேச பாடசாலைகளைச் சேர்ந்த 3500 மெய்வல்லுநர்களை கவர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப் போட்டியில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை 854 புள்ளிகளை பெற்று ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை வென்றெடுத்ததுடன், 677 புள்ளிகளை பெற்ற கொழும்பு கேட்வே கல்லூரி இரண்டாமிடத்தை வென்றெடுத்தது. மேலும் பெண்கள் பிரிவில் நடைபெற்ற 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் கேட்வே கல்லூரியை சேர்ந்த ஷனிகா தெவ்மினி பெர்னாண்டோ வெற்றி பெற்று ஒட்டுமொத்த றிட்ஸ்பரி சம்பியன் கிண்ணத்தை வென்றெடுத்ததுடன், அதே பாடசாலையை சேர்ந்த உதந்த பண்டார ஆண்கள் பிரிவின் கீழ் ஒட்டுமொத்த றிட்ஸ்பரி சம்பியன் கிண்ணத்தை வென்றெடுத்தார்.

இறுதிநாள் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக Pearson Qualifications International  நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஸ் கப்டேரியன் கலந்து கொண்டிருந்ததுடன், சிபிஎல் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு தலைவரும், குழு பணிப்பாளருமான நந்தன விக்ரமகேவும் பங்குபற்றியிருந்தார்.

இந்த அனுசரணை குறித்து சிபிஎல் ஃபூட்ஸ் இன்டர்நெஷனல் லிமிடெட் நிறுவனத்தின் உதவி சந்தைப்படுத்தல் முகாமையாளர் நிலுபுல் டி சில்வா கருத்து தெரிவிக்கையில், 'சொக்லட் துறையின் சந்தை முன்னோடியாக திகழும் றிட்ஸ்பரி வர்த்தகநாமமானது சர்வதேச பாடசாலை தடகள விளையாட்டு சம்பியன் போட்டிகளுடன் கைகோர்த்துள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகிறோம். வருங்கால சாதனையாளர்களுக்கான களமாக இந் நிகழ்வை கருதுகிறோம். சிறுவர்களுக்கு தமது திறமைகளை மேம்படுத்தி விளையாட்டுத் துறையில் முன்னோடியாக வளம் வருவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதே றிட்ஸ்பரி அனுசரணையின் குறிக்கோளாகும். ISAC ஆனது இலங்கையிலுள்ள தடகள வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களை இலங்கையின் விளையாட்டு தூதரர்களாக உருவாக்குவதற்கான முக்கிய பங்களிப்பினை வழங்கி வருகிறது' என தெரிவித்தார்.

றிட்ஸ்பரி வர்த்தகநாமமானது தொடர்ந்து இலங்கையின் விளையாட்டு போட்டிகளுக்கு அனுசரணை வழங்கி வருவதுடன், கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட சேர்.ஜோன் டார்பட் உள்ளக பாடசாலை மெய்வல்லுநர் போட்டிகள், கனிஷ்ட தேசிய ஸ்கொஷ் சம்பியன் தொடர், உள்ளக சர்வதேச பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டிகள் ஆகியவற்றுக்கும் அனுசரணை வழங்குகிறது.

சிபிஎல் நிறுவனத்தின் முதன்மை வர்த்தகநாமமான றிட்ஸ்பரி இலங்கையரிடையே வீட்டுப்பாவனை பொருளாக மாற்றமடைந்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற SLIM வர்த்தகநாம விருது வழங்கும் விழாவில் 'ஆண்டின் சிறந்த வர்த்தகநாமம்' விருதினை றிட்ஸ்பரி வென்றுள்ளது. மேலும் ஆண்டின் வர்த்தகநாம தயாரிப்புக்கான தங்க விருது, ஆண்டின் உள்நாட்டு வர்த்தகநாம விருது, றிட்ஸ்பரி Tropica தயாரிப்புக்கான ஆண்டின் சிறந்த புதிய அறிமுகத்திற்கான விருது போன்றவற்றையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X