2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வடக்குத் தெற்குத் துடுப்பாட்ட போட்டி ஆரம்பம்.

Super User   / 2014 மார்ச் 06 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்

யாழ்.மானிப்பாய் இந்து கல்லூரி அணிக்கும் கொழும்பு இந்துக் கல்லூரி அணிக்கும் இடையில் 'வடக்கிற்கும் தெற்கிற்கும்' இடையிலான மாபெரும் துடுப்பாட்டப் போட்டியின் 3 ஆவது வருடபோட்டி நாளை வெள்ளிக்கிழமை (07) கொழும்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபர் எஸ்.சிவனேஸ்வரன், கொழும்பு இந்துக்கல்லூரி அதிபர் ஐ.இராஜரட்னம் ஆகியோருக்கு இடையிலான நட்புறவே இந்தப் போட்டியினை நடத்துவதற்கு ஏதுவான காரணியாகவுள்ளது.

மட்டுப்படுத்தப்படாத பந்துபரிமாற்றங்களைக் கொண்ட இந்தப் போட்;டி வெள்ளி மற்றும் சனிக்கிழமை (07-08) ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.

2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போட்டியில் முதல் வருடப்போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன், இரண்டாவது வருடம் நடைபெற்ற போட்டியில் கொழும்பு இந்துக் கல்லூரி அணி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X