2025 ஜூலை 17, வியாழக்கிழமை

''நீலப் போரில்'' மாபெரும் போட்டிக்கான புதிய இலச்சினை அறிமுகம்

Super User   / 2014 மார்ச் 07 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த வாரம் நடைபெறும் ரோயல், சென்.தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான 135ஆவது "நீலப் போரில்" மாபெரும் போட்டிக்கான புதிய இலச்சினை  மற்றும் புதிய தங்க நாணயம் அறிமுகம் செய்யப்படவுள்ளன. மாபெரும் போட்டிகளின் நீண்டகால வரலாற்றில் இத்தகைய பிரத்தியேக இலச்சினை அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதற்தடவையாகும். தங்க நாணயம் நாணயச் சுழற்சியில் பயன்படுத்தப்படவுள்ளது. புதிய இலச்சினையும், தங்க நாணயமும் 2014ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் திகதி கொழும்பு - 07, குதிரைப் பந்தயத்திடலில் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ரோயல் தோமியன் மாபெரும் கிரிக்கட் போட்டிக்கான இலச்சினை

 ரோயல் - தோமஸ் அணிகளுக்கு இடையிலான முன்னைய மாபெரும் கிரிக்கட் போட்டிகளின் வரலாறு சார்ந்த முக்கியமான காரணிகளுடன் தொடர்புடையது.

இந்த இலச்சினையில் எளிமை பேணப்பட்டுள்ளதுடன், போட்டியின் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் டி.எஸ்.சேனநாயக்க ஞாபகார்த்தக் கேடயத்தின் வடிவத்திற்கமைய உருவாக்கப்பட்டுள்ளது. இலச்சினையின் உச்சத்தில் குறிப்பிடப்பட்ட வருடமானது, முதற்போட்டி இடம்பெற்ற தினத்தைக் குறிக்கிறது. போட்டிக்கான பெயரின் வரிசையில் இரு பாடசாலைகளின் சின்னங்களும் அமைந்துள்ளன. போட்டியின் பெயரைச் சுட்டி நிற்கும் பழைய ஆங்கில எழுத்துருவானது, இந்த நிகழ்ச்சியின் பாரம்பரிய மரபையும், பெருமையையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

போட்டிக்கான பெயரின் கீழுள்ள வாசகங்கள், பாடசாலைக் கொடிகளின் நிறங்கள் காரணமாக, இவ்விரு பாடசாலைகளுக்கும் இடையிலான போட்டிக்கு மாத்திரமே உரித்தானவையாகக் காணப்படுகின்றன. அதனை விளக்குவதற்கு வர்ணங்களின் பயன்பாடு போதுமானது. இறுதியாக இருக்கும் கிரிக்கட் வீரரின் உருவம் விளையாட்டைச் சித்தரிப்பதாக அமைந்துள்ளது.

2014 ரோயல்-தோமியன் குழுவின் தலைவர் ஹரித் ஜயசூரிய கருத்து வெளியிடுகையில், 'சிறப்பான அடையாளத்திற்காகவும், பெருமையும் தனித்தன்மையும் சேர்ந்த மாபெரும் போட்டியின் அங்கீகாரத்திற்காகவும், இந்த இலச்சினையை வருடந்தோறும் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்தார். தங்க நாணயம் வங்கியொன்றில் பாதுகாத்து வைக்கப்பட்டு, ஒவ்வொரு வருடமும் பயன்படுத்தப்படும். ஷஷஇந்தக் கூட்டு முயற்சியானது, 135 வருடங்களின் பின்னர் ரோயல் - தோமஸ் போட்டிகளில் புரட்சியாகத் திகழக்கூடிய வரலாற்றைப் புதுப்பிக்கிறது.

"வருடாந்தம் நடைபெறும் ரோயல் - தோமியன் கிரிக்கட் போட்டியானது, இலங்கையின் பாடசாலை கிரிக்கட் நாளேட்டில் மிகவும் பெறுமதியான மற்றும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சியாகும். விளையாட்டின் மகோன்னதம், ரசிகர்களின் பங்கேற்பு, பொதுமக்களின் ஆர்வம் போன்றவற்றின் அடிப்படையில் காலத்துக்குக் காலம் வலுவடைந்து வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில் இணையக் கிடைப்பதையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

டீ.எஸ்.சேனநாயக்க ஞாபகார்த்த கேடயத்திற்காக நடத்தப்படும் மாபெரும் போட்டியானது, மார்ச் மாதம் 13ஆம், 14ஆம், 15ஆம் திகதிகளில் கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் இடம்பெறும். இதனைத் தொடர்ந்து மார்ச் 22ஆம் திகதி மஸ்டாங்ஸ் வெற்றிக் கிண்ணத்திற்கான 39ஆவது போட்டி இதே மைதானத்தில் நடைபெறும்.

கடந்த ஆண்டு 134ஆவது "நீலப் போரில்" ரோயல் கல்லூரி வெற்றி பெற்றதுடன், மஸ்டாங்ஸ் வெற்றிக் கிண்ணத்தையும் ரோயல் அணி சுவீகரித்தது. இந்தப் போட்டிக்கு முன்னதாக சைக்கிள் யாத்திரை இடம்பெறுவது வழக்கம். அனேகமாக, மாபெரும் போட்டி ஆரம்பமாகும் தினத்திற்கு முன்னதாக சைக்கிள் சவாரி இடம்பெறும். தலைவரது இல்லத்திற்குச் சென்று அவரை ஊக்குவித்தல் இதன் நோக்கமாகும்.


இரு பாடசாலைகளுக்கும் இடையிலான வருடாந்த கிரிக்கட் போட்டி 1879ஆம் ஆண்டு தொடக்கம் நடைபெற்று வருகிறது. இந்த மூன்று-நாள் போட்டியானது தடங்கல் இன்றித் தொடர்ச்சியாக நடைபெறும் உலகின் இரண்டாவது மிக நீண்டத் தொடரின் போட்டியாகக் கருதப்படுகிறது. இரு கல்லூரிகளுக்கும் பொதுவான நீல நிறம் காரணமாக, இது மிகுந்த மனவிருப்பத்துடன் "நீலப் போர்" என்று அழைக்கப்படுகிறது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X