2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வாகரை, வாழைச்சேனை அணிகள் சம்பியன்

Super User   / 2014 மார்ச் 09 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜவ்பர்கான்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்த மட்டக்களப்பு மாவட்ட கரப்பந்தாட்ட அணிகளுக்கிடையலான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஆண்கள் பிரிவில் வாழைச்சேனை அணியும் பெண்கள் பிரிவில் வாகரை அணியும் சம்பியன்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு கல்லடி கரப்பந்தாட்ட மைதானத்தில் சனிக்கிழமை (08) நடைபெற்ற இச்சுற்றுத்தொடரில் ஆண்கள் பிரிவில் 11 அணிகளும் பெண்கள் பிரிவில் 6 அணிகளும் பங்குகொண்டன.

ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் வாழைச்சேனை மற்றும் மண்முனை வடக்கு அணிகள் மோதிக்கொண்டன.25க்கு 23 என்ற அடிப்படையில் வாழைச்சேனை அணி சம்பியனாகியது.

பெண்கள் பிரிவில் வாகரை மற்றும் கொக்கட்டிச்சோலை அணிகள் மோதின.25க்கு 21 என்ற அடிப்படையில் வாகரை அணி சம்பியனாக தெரிவாகியுள்ளது.

இறுதிப்போட்டியில் தெரிவான இருஅணிகளும் கொழும்பில் நடைபெறவுள்ள தேசிய போட்டியில் பங்குகொள்ளவுள்ளன.

தேசிய இளைஞர்சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.எம்.நைறூஸ் தலைமையில் நடைபெற்ற இச் சுற்றுப்போட்டியில் விளையாட்டு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X