2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கரப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி.

Super User   / 2014 மார்ச் 11 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான ஆண், பெண் வருடாந்த கரப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (09) களுமுந்தன்வெளி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

6 கழகங்கள் பங்குபற்றியிருந்த இந்தத் தொடரின் இறுதியில் ஆண்கள் அணியில் கோவில்போரதிவு உதயதாரகை விளையாட்டுக்கழகம் 3 இற்கு 2 புள்ளிகள் பெற்று முதலிடத்தினையும், களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தினையும் பெற்று வெற்றியீட்டியது.

இந்நிலையில் பெண்கள் பிரிவில் முதலிடத்தினையும் களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் பெண்கள் அணி 3 இற்கு 2 புள்ளிகள் பெற்று முதலிடத்தினையும், கோவில்போரதிவு உதயதாரகை விளையாட்டுக் கழகத்தின் பெண்கள் அணி இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X