2025 ஜூலை 17, வியாழக்கிழமை

றைஸ்டார் விளையாட்டுக்கழம் சம்பியன்.

Super User   / 2014 மார்ச் 12 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலமுனை றைஸ்டார் விளையாட்டுக்கழகம் நடாத்திய மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிச் சுற்றுப் போட்டி சனிக்கிழமை (08) பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் மோதிய றைஸ்டார் விளையாட்டுக்கழம், பாலமுனை சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக் கழகத்தை வெற்றிகொண்டு  சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இச்சுற்றுப் போட்டியானது அணிக்கு பதினொரு வீரர்களைக் கொண்ட பத்து ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது.

றை ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.ஐ. அப்துல் மனாப் தலைமையில் வைபவரீதிக ஆரம்பமான இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக்கழம் பத்து ஓவர்கள் முடிவில் ஆறு இலக்குகளை இழந்து அறுபத்திரண்டு ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றைஸ்டார் விளையாட்டுக்கழம் 9.2 ஓவர்களில் இரண்டு இலக்குகளை மாத்திரம் இழந்து 64 ஓட்டங்களைப் பெற்று சம்பியனானது.

சுற்றுப் போட்டியின் ஆட்டநாயகனாக பாலமுனை றைஸ்டார் கழகத்தைச் சேர்ந்த எம்.ஐ.எம்.றினாஸ் தெரிவானார்.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அனிசில் மற்றும் அதிதிகளாக கிராம சேவை அதிகாரி எம்.எஸ்.எம் இப்றாஹீம், எம்.ரீ.சௌபத் அல்பித், ஐ.எல்.எம் பாரீஸ் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.


 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X