2025 ஜூலை 17, வியாழக்கிழமை

திருகோணமலை கோட்ட மட்ட கால்பந்தாட்ட போட்டி.

Super User   / 2014 மார்ச் 13 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.சசிக்குமார்
திருகோணமலை கோட்ட மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான  விளையாட்டுப்போட்டிகளில் கால்பந்தாட்ட போட்டிகள்  வித்தியாலோக ராஜகீய வித்தியாலயம் மற்றும் விபுலாநந்தா கல்லூரி மைதானங்களில் செவ்வாய்கிகழமை (11) நடைபெற்றன.

இப் போட்டிகளில் பெண்களுக்காகன 19 வயதுக்கு உட்பட்ட போட்டி வித்தியாலோக ராஜகீய வித்தியாலய மைதானத்திலும், ஆண்களுக்கான  15 வயது. 17 வயது. 19 வயது போட்டிகள் விபுலாநந்தா கல்லூரி மைதானத்திலும் நடைபெற்றன.

பெண்களுக்கான போட்டியில் புனித மரியாள்கல்லூரி  செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியாலயத்தை 1 க்கு 0 என்ற கோல்கணககில் வென்று சம்பியனானது.

அண்களுக்கான 15 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியின் இறுதிப்போட்டியில் புனித சுசையப்பர் கல்லூரியை எதிர்த்து ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலய அணியினர் மோதினர். ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல்கள் பெறாத நிலையில் வெற்றியை தீர்மானிக்க தண்ட உதைகள் 5 (பெனால்டி ) வழங்கப்பட்டது. இதில் புனித சையப்பர் கல்லூரி 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனானது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X