2025 ஜூலை 16, புதன்கிழமை

வடக்கின் மாபெரும் போர் ஆரம்பம்

Super User   / 2014 மார்ச் 13 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் இடையிலான 108 ஆவது வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டிகள் வியாழக்கிழமை இன்று (13) காலை ஆரம்பமானது.

ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வீரர்களுக்கு கைலாகு கொடுத்து போட்டியினை ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து சென்.ஜோன்ஸ் கல்லூரி அணித்தலைவர் பி.துவாரகசீலன் மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணித்தலைவர் கே.ஜுனியஸ்கனிஸ்ரன் ஆகியோர் நாணயச் சுழற்சியில் ஈடுபட்டனர்.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்; மத்திய கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கிணங்க முதல் இனிங்ஸிற்காக களமிறங்கியது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X