2025 ஜூலை 16, புதன்கிழமை

கோட்ட மட்ட போட்டி முடிவுகள்

Kogilavani   / 2014 மார்ச் 14 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை, கோட்டமட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப்போட்டி கடந்த 7 ஆம்  முதல் கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் 19 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான எல்லே போட்டிகள் முடிவுற்றுள்ளன.

இப்போட்டியின், இறுதிப்போட்டியில் புனித மரியாள் கல்லூரியை எதிர்த்து அபயபுரம் மகா வித்தியாலய அணியினர் மோதினர். இதில் புனித மரியாள் கல்லூரி அணியினர் வெற்றி பெற்று சம்பியனாகினர்.

19, 17 வயது ஆண்களுக்கான கால்பந்தாட்ட போட்டி விபுலாந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

17 வயது கால்பந்தாட்ட போட்டியில் வெள்ளை மணல் அல் அசார் முஸ்லிம் மகா வித்தியாலயம் சம்பியனாகியது. 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தை எதிர்து விளையாடிய புனித சூசையப்பர் கல்லூரி அணியினர் 2:1 என்றகோல் கணக்கில் வெற்றி பெற்று சம்யியனாகினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X