2025 ஜூலை 16, புதன்கிழமை

பொன் அணிகளின் ஒருநாள் துடுப்பாட்டம்.

Super User   / 2014 மார்ச் 14 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்

பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையிலான 26ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ண ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி, சனிக்கிழமை (15) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பிக்நெல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்;ப்பாணத்தில் நடைபெறும் பெரும் துடுப்பாட்டப் போட்டிகளின் வரிசையில் இரண்டாவது அதிக வருடங்களைக் கடந்த போட்டியான பொன் அணிகளின் துடுப்பாட்ட போட்டி விளங்குகின்றது.

அதனடிப்படையில் பொன் அணிகளின் போர் முதலில் மட்டுப்படுத்தப்படாத பந்துபரிமாற்றங்கள் கொண்ட இரண்டு நாள் போட்டிகளாக நடைபெற்று, தொடர்ந்து ஒருநாள் போட்டி நடைபெறுவது வழக்கம்.

எனினும் இவ்வருடம் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பற்றிக்ஸ் தினம் கொண்டாடவிருப்பதினால் 97ஆவது பொன் அணிகளின் போர் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அவற்றின் ஒருநாள் போட்டி சனிக்கிழமை (15) நடைபெறவுள்ளது.

இதுவரையிலும் நடைபெற்ற பொன் அணிகளுக்கிடையிலான 25 ஒருநாள் போட்டிகளில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி 19 போட்டிகளிலும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி 6 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

இதுவரையிலும் நடைபெற்ற போட்டிகளில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி 2002ஆம் ஆண்டு 7 இலக்குகள் இழப்பிற்கு 320 ஓட்டங்களையும், யாழ்ப்பாணக் கல்லூரி அணி 1992ஆம் ஆண்டு 8 இலக்குகள் இழப்பிற்கு 192 ஓட்டங்களையும் பெற்றிருந்தன.

பொன் அணிகளின் ஒருநாள் போட்டியில் இதுவரையிலும் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியின் எம்.பிரசந்த ஜோசப் 2001ஆம் ஆண்டு 101 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டமையே ஒரேயோரு சதமாகக் காணப்படுகின்றது.

அத்துடன் பந்துவீச்சில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியின் ஜி.ஆர்.தேவராஜன் 11 ஓட்டங்களுக்கு 5 இலக்குகளையும், யாழ்ப்பாணக் கல்லூரி அணியின் ஜி.ராகவன் 1986ஆம் ஆண்டு 18 ஓட்டங்களுக்கு 5 இலக்குகளைக் கைப்பற்றியமை சிறப்பான பந்துவீச்சுப் பரிதிகளாகக் காணப்படுகின்றன.

பொன் அணிகள் போரின் ஒருநாள் துடுப்பாட்ட போட்டியானது இரு அணிகளும் சீருடையுடன், வெள்ளை நிறப் பந்து மற்றும் கறுப்பு நிற துடுப்பாட்ட மட்டை என்பன பயன்படுத்துகின்றன. இது யாழ்ப்பாணத்தின் துடுப்பாட்ட துறையின் வளர்ச்சியின் ஒருபடியாகும்.

இரு அணிகளும் இவ்வருடம் எதுவித ஒருநாள் போட்டியிலும் பங்குபற்றியிருக்கவில்லை. இருந்தும் களத்தடுப்பில் பெயர் போன சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியும், அதிரடித் துடுப்பாட்ட வீரர்களைத் தன்னகத்தே கொண்டுள்ள யாழ்ப்பாணக் கல்லூரி அணியும் ஒருநாள் போட்டியில் மோதுவது சிறப்பானதாகவும், ரசிகர்களுக்கு விருந்தாகவும் அமையும்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X