2025 ஜூலை 16, புதன்கிழமை

புனித சூசையப்பர் கல்லூரி அணி சம்பியன்.

Super User   / 2014 மார்ச் 17 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி அருட் தந்தை ஹேபியர், அருட் சகோதரர் சூசைதாசன் ஆகியோர் நினைவாக அழைக்கப்பட்ட 8 பாடசாலை அணிகள் பங்கு பற்றும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்று இம்;மாதம் முதலாம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டு இதன் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (16) ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்பணி பொன்சியன்  தலைமையில்; நடைபெற்ற போட்டிகளில் புனித சூசையப்பர் கல்லூரியை எதிர்த்து ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலய அணியினர் மோதினர்.

இப்போட்டியில் புனித  சூசையப்பர் கல்லூரி அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலய அணியினரை வெற்றி கொண்டு சம்பியனாகினர்.

இச்சுற்றுப்போட்டியில்   முள்ளிப்பொத்தாணை அல் ஹிஜ்ரா முஸ்லிம் மகா வித்தியாலயம் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது.

செலிங்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.ரங்கநாதன் பிரதம அதிதியாகவும், திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில ஜெயசேகர கௌரவ விருந்தினராகவும், திருகோணமலை நகர சபை தலைவர் க.செல்வராசா விசேட விருந்தினராகவும் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி வைத்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X