2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

புத்தளம் சஹீரியன்ஸ் இளைஞர் குழு சம்பியன்

Kanagaraj   / 2014 மார்ச் 17 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.யூ.எம்.சனூன்


26 ஆவது   தேசிய  இளைஞர்  விளையாட்டு விழாவை முன்னிட்டு புத்தளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் புத்தளம் சஹீரியன்ஸ் இளைஞர் குழுவினர் 124 புள்ளிகள் பெற்று  சம்பியனாக தெரிவாகியுள்ளது.

இந்த விளையாட்டு போட்டிகள் ஞாயிறன்று (16) புத்தளம் சென். அன்ரூஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும், தேசிய இளைஞர்கள் சேவை மன்றமும், புத்தளம் பிரதேச செயலகமும் இணைந்து இப்போட்டிகளை  ஏற்பாடு  செய்திருந்தன.

இப்போட்டி நிகழ்வுகளின்  போது  இளைஞர் சேவைகள் மன்றத்தின்   வட மேல் மாகாண அத்தியட்சகர்   குமுதினி ராஜபக்ஸ, புத்தளம் மாவட்ட இளைஞர் சேவை மன்ற  அத்தியட்சகர் திரு கருணாரத்ன, புத்தளம் இணைப்பாளர் எம்.எச்.எம்.நிகார் உள்ளிட்ட மற்றும் பலரும்  கலந்து   சிறப்பித்தனர்.

இப்போட்டிகளில்  87 புள்ளிகளை பெற்று  இரண்டாம்  இடத்தினை  புத்தளம்  சாந்த அன்றூஸ் கழகமும், 85  புள்ளிகளை பெற்று  மூன்றாம் இடத்தினை புத்தளம் ஆனந்தா கழகமும் பெற்றுக்கொண்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X