2025 ஜூலை 16, புதன்கிழமை

கனிஷ்ட மெய்வல்லுநர் தகுதிகாண் போட்டிகள்

Kogilavani   / 2014 மார்ச் 21 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தின் ஏற்பாட்டில் கனிஷ்ட மெய்வல்லுநர்  தகுதிகாண் போட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இதில் மாவட்டத்தில் உள்ள  42 பாடசாலைகளைச் சேர்ந்த  470 மாணவர்களும். 255 மாணவிகளும் பங்கு கொள்ள உள்ளனர்.
16 வயது, 18 வயது, 20 வயது என்ற மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படும் இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெறும் போட்டியாளர்களுக்கு வெற்றிக்கிண்ணஙகள் பரிசளிக்கப்படவுள்ளன.

எதிர்வரும் மே மாதம் 2ஆம் 3ஆம் 4ஆம் திகதிகளில்  கொழும்பில் நடைபெற உள்ள இலங்கை கனிஷ்ட மெய்வல்லுநர் தகுதிகாண் போட்டிகளில் பங்கு கொள்ள இவ்வெற்றியாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளார்கள்.

இவ்வருடம் ஜுன் மாதம் சீனாவில் நடைபெற உள்ள கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் இலங்கை வீரர்களை தெரிவுசெய்யும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக இப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

2002 ஆம் வருடம் பாங்கொக் நகரில் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் ர.ரதீசன் திருகோணமலை மாவட்ட வீரராக பங்கு கொண்டு இருந்தார்.

இவர் 2004, 2005 ஆம் வருடங்களில் சிரேஷ்ட மெய்வல்லுநர்; போட்டிகளில் பங்கு கொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தார்.
இவருடன்  மு.ஆ.ஹாரிஸ், ரி.ரஜன், நிசாந்தினி ஆகியோரும் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பங்கு கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாவட்டத்தில் திறமையான வீரர்களை இனம் கண்ட அவர்களின் ஆற்றல்களை வெளிக்கொண்டு வருவதற்கு இவ்வறான போட்டிகள் களமாக அமையும் என்று திருகோணமலை மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தின் செயலாளர்  ச.விஜயநீதன் தெரிவித்தார்.
இப்போட்டி தொடர்ந்து நாளையும் நடைபெறவுள்ளது.   

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X