2025 ஜூலை 16, புதன்கிழமை

புதிய கால்ப்பந்தாட்ட தொடர்

A.P.Mathan   / 2014 மார்ச் 22 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நகரில் புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக் புதிய கால்ப்பந்தாட்ட தொடர் ஒன்றினை ஆரம்பித்துள்ளது.

இந்த புதிய தொடருக்கு புத்தளம் நியூ ஸ்டார்ஸ் கால்ப்பந்தாட்ட கழகம் அனுசரணை வழங்கி உள்ளது. நொக் அவுட் முறையிலான இந்த புதிய தொடரின் போட்டிகள் பிரதி வெள்ளி, சனிக்கிழமைகளில் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

புத்தளம் லீக்கில் அங்கத்துவம் வகிக்கின்ற லிவர்பூல், விம்பிள்டன், போல்டன், ட்ரிபல் செவன், நிவ் பிரன்ட்ஸ், யுனைடெட்  மற்றும் பேர்ல்ஸ் ஆகிய ஏழு அணிகள் போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளன.

தொடரில் சம்பியன் மற்றும் ரன்னரப்பாகும் அணிகளுக்கு ரொக்கப்பணத்துடன் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்படவுள்ளதாக இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளன பொருளாளரும், புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக் செயலாளருமான ஜே.எம்.ஜௌசி தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X