2025 ஜூலை 16, புதன்கிழமை

குருநகர் கார்மேல் போய்ஸ் அணி சம்பியன்

Super User   / 2014 மார்ச் 23 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-
குணசேகரன் சுரேன்


திருநெல்வேலி முத்துத்தம்பி விளையாட்டு கழகம், சைவ பள்ளிக்கூட நண்பர்களும் இணைந்து நடத்திய 'கணேஸ் தர்மகுலசிங்கம்' ஞாபகார்த்த மென்பந்தாட்டத் துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் குருநகர் கார்மேல்போய்ஸ் விளையாட்டுக்கழக அணி சம்பியனாகியது.

அணிக்கு 9 பேர் பங்குபற்றும் 12 பந்துபரிமாற்றங்கள் கொண்ட மேற்படி சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று (22) திருநெல்வேலி முத்துத்தம்பி மைதானத்தில் இடம்பெற்றது.
இறுதிப்போட்டியில் குருநகர் கார்மேல் போய்ஸ் விளையாட்டுக்கழக அணியும் கொக்குவில் ஸ்ரீகாமாட்சி அணியும் மோதின.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கார்மேல் போய்ஸ் அணி, 12 பந்துபரிமாற்றங்கள் நிறைவில் 7 இலக்குகளை இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அ.த.தேசியன் 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

103 என்ற வெற்றியிலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கொக்குவில் ஸ்ரீ காமாட்சி அணி 12 பந்துபரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து 96 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

இறுதிப்போட்டி வடமாகாண சபை உறுப்பினார்கள் பாலச்சந்திரன் கஜதீபன், சந்திரலிங்கம் சுகிர்தன் ஆகியோர் வெற்றிபெற்ற அணி மற்றும் வீரர்களுக்கான பரிசில்களையும் வெற்றிக்கேடயங்களையும் வழங்கினார்கள்.

இறுதிப்போட்டிக்காக நியமிக்கப்பட்ட நடுவர் வருகை தராதநிலையில் விருந்தினராகக் கலந்துகொண்ட பா.கஜதீபன் நடுவராகக் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X