2025 ஜூலை 16, புதன்கிழமை

ஒலிம்பிக்போட்டிக்கு இலங்கை குத்துச்சண்டை வீரர்கள்

Super User   / 2014 மார்ச் 31 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஸ்ரனிஸ்லஸ் கீதபொன்கலன்


2020 ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக்போட்டிக்கு இலங்கையில் இருந்து குத்துச்சண்டை வீரர்களை அனுப்புவதனை இலக்காகக்கொண்டு மஹாராஐh நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் நாடு முழுவதும் நடாத்தப்பட்டு வரும் பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சி முகாமும் தெரிவுப்போட்டியும் சனி மற்றும் ஞாயிறு (29,30) தினங்களில் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் நடைபெற்றது.

இவ் பயிற்சி முகாமிலும் தெரிவுப்போட்டியிலும் திருகோணமலை மாவட்டம் மற்றும் பொலநறுவை மாவட்டங்களை சேர்ந்த 450 மாணவர்கள் பங்குபற்றினர்.சனிக்கிழமை (29) ஆரம்பமான பயிற்சி முகாமில் சகல வயதுப்பிரிவு மாணவர்களுக்கும் குத்துச்சண்டையின் ஆரம்ப அறிவு மற்றும் நுட்பங்கள் குறித்து விளக்க வகுப்புகள் நடாத்தப்பட்டன.

சகல வயதுப்பிரிவினருக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டபோதும் தெரிவுப்போட்டிகளில் பங்குபற்றுவதற்கான அனுமதி 16 மற்றும் 17 வயதை உடைய மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற மாவட்ட மட்ட தெரிவுப்போட்டியில் 56 மற்றும் 60 கிலோகிராம் நிறைப்பிரிவில் வெற்றி பெற்ற 5 போட்டியாளர்களுக்கும் அடுத்தகட்டமாக தேசிய நிலைப்போட்டியில் பங்குபற்றுவதற்கான போதிய பயிற்சிகள் வழங்கப்படுமென்றும் அதன் பின்னர் சகல மாவட்டங்களிலும் இருந்து தெரிவு செய்யப்படும் 128 போட்டியாளர்களுக்கிடையில் இறுதிப்போட்டிகள் நடாத்தப்பட்டு வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவதுடன் அவர்களுக்கு சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றுவதற்கான போதிய பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் இந் நிகழ்ச்சித்திட்டத்தின் பணிப்பாளர் மஞ்சுள தேநுவர தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட இறுதி தெரிவுப்போட்டியில் 49 மற்றும் 52 கிலோகிராம் நிறைப்பிரிவில் எந்த ஒரு போட்டியாளரும் உரிய தகுதி நிலையை அடையாதமையினால் இவ்பிரிவுகளில் இருந்து அடுத்த சுற்றுக்கு யாரும் தெரிவு செய்யப்படவில்லை.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X