2025 ஜூலை 16, புதன்கிழமை

நாச்சிக்குடா சென்.மோஸ் அணி சம்பியன்

Super User   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி திருநகர் விளையாட்டுக்கழகம், கிளிநொச்சி மாவட்ட கால்பந்தாட்ட லீக்கில் பதிவு செய்யப்பட்ட கால்பந்தாட்;ட அணிகளுக்கிடையில் நடத்திய 9 பேர் கொண்ட கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் நாச்சிக்குடா சென்.மேரிஸ் அணி சம்பியனாகியது.

மேற்படி சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) திருநகர் விளையாட்டுக்கழகத்தில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் நாச்சிக்குடா சென்.மேரிஸ் அணியினை எதிர்த்து வட்டக்கச்சி இளந்தளிர் அணி மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்.மேரிஸ் அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.

இந்தச் சுற்றுப்போட்டியின் சிறந்த ஆட்ட நாயகனாக சென்.மேரிஸ் அணியின் என்.ஜினோஜனும் தொடர் நாயகனாக சென்மேரிஸ் அணியின் எஸ்.வீம்சிங்கும் சிறந்த கோல் காப்பாளராக இளந்தளிர் அணியின் வி.விஜிந்தனும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இறுதிப்போட்டி நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை வெற்றிபெற்ற அணி மற்றும் வீரர்களுக்கான பரிசில்களையும் வெற்றிக்கேடயங்களையும் வழங்கினார்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X