2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

கண்டி யோர்க் சம்பியன்

Super User   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-
மொஹொமட் ஆஸிக்


கண்டி காற்பந்தாட்ட லீக் ஒழுங்கு செய்த கண்டி மாவட்ட விளையாட்டு கழகங்களுக்கிடையிலான காற் பந்தாட்டப் போட்டித் தொடரில் 'ஏ' பிரிவின் சம்பியனாக கண்டி யோர்க் விளையாட்டு கழகம் தெரிவானதுடன் அதன் இரண்டாம் இடத்தினை கண்டி கோல்டன் ஸ்டார்ஸ் விளையாட்டு கழகம் பெற்றுக் கொண்டது.

கண்டி போகம்பறை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) இடம் பெற்ற இவ் இருதிப் போட்டியின் போது ஒரு அனியும் புள்ளிகள் பெறாத நிலையில், 0-0 என்ற அடிப்படையில் வெற்றி தோல்வி இன்றி போட்டி முடிவுற்ற போதும் வெற்றியை நிர்னயிப்பதற்காக வழங்கப்பட்ட தன்ட உதையின் மூலம்; 4-3 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் கண்டி யோர்க் விளையாட்டு கழகம் வெற்றி பெற்றது.

இப் போட்டித் தொடரின் 'பீ;' பிரிவின் சம்பியனாக கலகெதர எவர் கிரீன் விளையாட்டு கழகம் தெரிவானதுடன், இரண்டாம் இடத்தை சன் ரைஸ் விளையாட்டு கழகம் பெற்றுக் கொண்டது.

'சீ' பிரிவின் சம்பியனாக திகன ரஜவெல்ல ப்லக் ஹில்ஸ் விளையாட்டு கழகம் தெரிவானதுடன்  இதன் இரண்டாம் இடத்தை   ஹந்தானை சன் போய்ஸ் விளையாட்டு கழகம் பெற்றுக் கொண்டது.

இவ் விளையாட்டு போட்டிகளில் கேடயங்களை வழங்குவதற்கு கண்டி நகர முதல்வர் மஹேந்திர ரத்வத்த, இலங்கை காற்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் ரஞ்சித் ரொட்ரிகோ, முன்னால் கண்டி லீகின் தலைவர் போதி லியனகே, உற்பட பலர் கலந்து கொண்டனர்.

வெற்றிபெற்ற கழகங்களுக்கு பணப் பரிசுகளும் வழங்கப்பட்டன



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X