2025 ஜூலை 16, புதன்கிழமை

உலக இளைஞர் மாநாட்டு சைக்கிளோட்டப் போட்டி

Super User   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா

இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை இளைஞர் சம்மேளனமும் இணைந்து, உலக இளைஞர் மாநாட்டை முன்னிட்டு நடத்தும் சைக்கிளோட்டப் போட்டி இன்று (02) காலை யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இருந்து ஆரம்பித்துள்ளது.

இந்த சைக்கிளோட்டத்தினை யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் ஆரம்பித்து வைத்தார்.
இளைஞர் விவகாரம் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையில் இப்போட்டிகள்  ஐந்து கட்டங்களாக  நடைபெறவுள்ளன.

முதலாம் கட்டப் போட்டி இன்று (02) துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து ஆரம்பித்து வவுனியா தமிழ் மகா வித்தியாலயம் வரையும்  சென்றடையவுள்ளது.

இரண்டாம் கட்டப்போட்டி வியாழக்கிழமை (03) மதவாச்சியில் இருந்து ஆரம்பமாகி வாரியப்பொல நகரப் பகுதியினைச் சென்றடையவுள்ளதுடன், மூன்றாம் கட்டப் போட்டி வெள்ளிக்கிழமை (04) குருணாகல மாபிட்டியவிலிருந்து ஆரம்பமாகி அவிசாவளை வரை சென்றடையவுள்ளது.

நான்காம் கட்டப் போட்டி சனிக்கிழமை (05) இரத்தினபரி சவாலி மைதானத்தில் இருந்து ஆரம்பமாகி மாத்தறை சனத் ஜெயசூரியா மைதானம் வரையும் சென்றடையவுள்ளது.

ஐந்தாம் கட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (06) மாத்தறை சனத்ஜெயசூரிய மைதானத்தில் இருந்து ஆரம்பமாகி இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தலைமையகம் அமைந்துள்ள மகரகம வரையும் சென்றடையவுள்ளதாக இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் நாயகமும் தலைவருமான லலித்பியும் பெரெரா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X