2025 ஜூலை 16, புதன்கிழமை

தேசிய மட்ட ஹொக்கிப் போட்டிகள் ஆரம்பம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 02 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


இலங்கை பாடசாலை     ஹொக்கிச்     சங்கத்தினால்     நடத்தப்பட்டு     வரும் பாடசாலைகளுக்கிடையிலான ஹொக்கிச் சுற்றுப்போட்டிகள் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பிக்னெல் மைதானத்தில்  புதன்கிழமை (2) ஆரம்பமாகியது.

இச்சுற்றுப்போட்டி 19 வயதுப்பிரிவினருக்கிடையில் நடைப்பெறவுள்ளது. இப்போட்டியில் தேசிய ரீதியில் 22 ஆண்கள் பாடசாலை அணிகளும் 16 பெண்கள் பாடசாலை அணிகளும் பங்குபற்றுகின்றன.

லீக்முறையில் நடைபெறவுள்ள இப்போட்டிகளில், இன்றும் (2) நாளையும் (3) தெரிவுப் போட்டிகள் இடம்பெற்று 4 ஆம் திகதி காலிறுதிப் போட்டிகள் ஆரம்பமாகவிருக்கின்றன.

தொடர்ந்து அரையிறுதிப் போட்டிகள்     இடம்பெற்று     5ஆம்     திகதி     இறுதிப்போட்டி இடம்பெறவுள்ளதாக யாழ்.மாவட்ட பாடசாலைகள் ஹொக்கிச் சங்கத்தின் இணைப்பாளர் பிரான்சிஸ் சந்திரன் தெரிவித்தார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X