2025 ஜூலை 16, புதன்கிழமை

யாழ். கல்வி வலய கால்பந்தாட்டச் சம்பியன்கள்

Super User   / 2014 ஏப்ரல் 07 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்

யாழ். கல்வி வலயப் பாடசாலைகளின் கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டிகளில் 15 வயதுப்பிரிவில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியும், 17 வயதுப்பிரிவில் சென்.ஜோம்ஸ் மகா வித்தியாலய அணியும், 19 வயதுப்பிரிவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியும் சம்பியனாகின.

மேற்படி போட்டிகள் யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் திங்கட்கிழமை (07) நடைபெற்றது.

15 வயதுப்பிரிவு இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியும் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியும் மோதின. இதில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. மூன்றாமிடத்தினை கொக்குவில் இந்துக் கல்லூரி அணி பெற்றுக்கொண்டது.

17 வயதுப்பிரிவு இறுதிப்போட்டியில் சென்.ஜேம்ஸ் மகா வித்தியாலய அணியும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியும் மோதின. இதில் சென்.ஜேம்ஸ் அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மூன்றாமிடத்தினை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி பெற்றுக்கொண்டது.

19 வயதுப்பிரிவு இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியும் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியும் மோதிக் கொண்டன. இதில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 4:3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது. மூன்றாமிடத்தினை சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி பெற்றுக்கொண்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X