2025 ஜூலை 16, புதன்கிழமை

முதற் போட்டியை வென்றது ஆனந்தா கல்லூரி

Super User   / 2014 ஏப்ரல் 27 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கும் கண்டி வித்தியார்தக் கல்லூரிக்கும் இடையில் இடம் பெரும் வில்லியம் கொபல்லவ கேடயத்திற்கான றக்பி போட்டியின் முதற் போட்டியை 36-18 என்ற புள்ளி வித்தியாசத்தில் கொழும்பு ஆனந்தா கல்லூரி வெற்றி பெற்றது.

கண்டி நித்தவெல றக்பி மைதானத்தில் சனிக்கிழமை (26) இடம் பெற்ற இப் போட்டி ஆரம்பத்தில் வித்தியார்த்த கல்லூரி முன்னிலையில் இருந்த போதும் போட்டியின் இடை வேலைவரை 15- 15 என்ற சம புள்ளிகளை பெற்றிருந்தன.

போட்டியின் இரண்டாம் பகுதியில் திறமையாக விளையாடிய ஆனந்தா கல்லூரி அனியினர் மொத்தமான ஆறு ட்ரைகளையும் மூன்று கோல்கலையும் பெற்று 36 புள்ளிகளை பெற்றனர்.

வித்தியார்த்த அணி இரண்டு ட்ரைகளையும் ஒரு கோலையும் இரண்டு பெனல்டிகளையும் பெற்று 18 புள்ளிகள் பெற்றன.
இப் போட்டியின் இருதிப் போட்டி கொழும்பில் இடம்பெற உள்ளது.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .