2025 ஜூலை 16, புதன்கிழமை

கூடைப்பந்தாட்டம் : ஹம்பாந்தோட்டை புளூஸ் அணி வெற்றி

Super User   / 2014 ஏப்ரல் 28 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழையமாணவர் சங்கத்தின் கொழும்புக்கிளை மற்றும் மட்டக்களப்பு கூடைப் பந்தாட்ட சம்மேளனம் இணைந்து நடாத்திய அருட் தந்தை ஹேபியர் சவால் கிண்ணத்துக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் ஹம்பாந்தோட்டை புளூஸ் அணி வெற்றியீட்டி அருட் தந்தை ஹேபியர் சவால் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட மைதானத்தில் வெள்ளிக்கிழமை (25) மாலை ஆரம்பமான ஏழு அணிகள் கலந்து கொண்ட தேசிய மட்ட கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் இலங்கை விமானப்படை அணியினரை எதிர்த்து ஹம்பாந்தோட்டை புளூஸ் அணியினர் மோதினர். இதில் விமானப்படை அணியினர் 51 புள்ளிகளையும், ஹம்பாந்தோட்டை புளூஸ் அணியினர் 57 புள்ளிகளையும் பெற்று ஹம்பாந்தோட்டை புளூஸ் அணியினர் வெற்றி பெற்றனர்.

இந்த சுற்றுப் போட்டியின் மூன்றாவது இடத்தினை மட்டக்களப்பு புளு அணியினர் பெற்றனர்.

இதன் இறுதிப்பரிசளிப்பு வைபவத்தில் விமானப்படையின் மட்டக்களப்பு பொறுப்பதிகாரி வின் கொமாண்டர் ஜே.எஸ்.எம்.பிரியதர்சன, மற்றும் அருட் தந்தை போல் சற்குணநாயகம், மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர் திருமதி மாசிலாமணி உட்பட மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழையமாணவர் சங்கத்தின் கொழும்புக்கிளை அங்கத்தவர்கள் மற்றும் முக்கியஸ்ததர்கள், மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

நான்காவது வருடமாக அருட் தந்தை ஹேபியர் சவால் கிண்ணத்துக்கான கூடைப்பபந்தாட்ட போட்டி மட்டக்களப்பில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.












You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .