2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

தோப்பூர் விளையாட்டுக் கழகம் வெற்றி

Super User   / 2014 ஏப்ரல் 28 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-முஹம்மட் புஹாரி

தோப்பூர் விளையாட்டுக் கழகம் மற்றும் பொலனறுவை மஜீத் நகர் விளையாட்டுக் கழகம் மோதிக்கொண்ட 25 பந்துப் பரிமாற்றங்களை கொண்ட கடின பந்து துடுப்பாட்ட சுற்றுப் போட்டியில் தோப்பூர் விளையாட்டுக் கழகம் 70 ஓட்டங்களினால் வெற்றியை தனதாக்கி கொண்டது.

மேற்படி போட்டி பொலனறுவை மஜீத் நகர் விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தோப்பூர் விளையாட்டுக் கழம் 25 பந்துப்பரிமாற்றங்கள் முடிவில் 9 இழக்குகளை இழந்து 205 ஓட்டங்களை பெற்றது. எஸ்.சபீஸ் 68 ஓட்டங்களை அதிக பட்ச ஓட்டமாக பெற்றார்.

206 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய பொலனறுவை மஜீத் நகர் விளையாட்டுக் கழகம் 22 பந்துப்பரிமாற்றங்கள் முடிவில் சகல இழக்குகளையும் இழந்து 199 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவிக் கொண்டது. ரசீம் 34 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் தோப்பூர் அணி சார்பாக என்.புஹாரி 3 பந்துப்பரிமாற்றங்களுக்கு 7 ஓட்டங்களை கொடுத்து 3 இழக்குகளை கைப்பற்றினார்.ஆட்ட நாயகனாக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த எஸ்.சபீஸ் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X