2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

அகில இலங்கை ஸ்நூக்கர் போட்டி

Super User   / 2014 ஏப்ரல் 29 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு


அகில இலங்கை ரீதியிலான ஜோர்ஜ் ஒன்டாச்சி ஸ்நூக்கர் கிண்ணத்தை முதல் முறையாக கண்டியைச் சேர்ந்த முருகேஸ் பிரதாப் (காசல் கியு கழகம்) வெற்றி கொண்டுள்ளார்.

வருடந்தோறும் நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு நடைபெறும் அகில இலங்கை ரீதியிலான ஸ்நூக்கர் சுற்றுப்போட்டி கடந்த மூன்று நாட்களாக நுவரெலியா கிரேன் விருந்தகத்தில் நடைபெற்றது. இதன் பரிசளிப்பு விழா திங்கட்கிழமை (28) இடம்பெற்றது.

இப் போட்டிகளில் இலங்கையில் புகழ்பெற்ற வீரர்கள் 136 பேர் கலந்து கொண்டனர். கொழும்பு, கண்டி, கம்பளை, மாவனல்லை, நுவரெலியா ஆகிய பகுதிகளை சேர்ந்த வீரர்கள் பங்குபற்றினர்.

இப் போட்டியில் முதல் முறையாக கண்டியை சேர்ந்த முருகேஸ் பிரதாப் (காசல் கியு கழகம்) முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டார். இரண்டாம் இடத்தை சுசன்த பொத்தேஜீ பெற்றுக் கொண்டார் (எஸ்.எஸ்.சீ கொழும்பு). மூன்றாம் இடத்தை நிமல் டீ.சில்வா (கிரேன் ஹோட்டல் விளையாட்டு கழகம் நுவரெலியா) பெற்றுக் கொண்டார்.

வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ வழங்கிவைத்தார்.

இப் போட்டியினை நுவரெலியா கிரேன் விருந்தகத்தின் விளையாட்டு கழக தலைவர் எஸ்.அன்பழகன் ஏற்பாடுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X