2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

மட்டக்களப்பு பிரதேச மட்ட விளையாட்டு விழா

Super User   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யபட்ட கழகங்களுக்கிடையிலான பிரதேச மட்ட விளையாட்டு விழா செவ்வாய்கிழமை (29) மட். செட்டிபாளையம் மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம்  தலைமையில் நடைபெற்ற இவ் விளையாட்டுப் போட்டியில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட 18 விளையாட்டுக் கழகங்கள் பங்கு பற்றியிருந்தன.

இதில் செட்டிபாளையும் நீயூட்டன் விளையாட்டுக் கழகம் 84 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினையும், களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகம் 48 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும், தேற்றாத்தீவு உதயம் விளையாட்டுக் கழகம் 41புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொட்டது.

இத்தில் வெற்றி பெற்ற விளையாட்டுக் கழகங்களுக்கும் வீர வீராங்கணைகளுக்கும் பெறுமதி மிக்க சான்றிதழ்களும், வெற்றிக் கேடயங்களும் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மீழ்குடியேற்றப் பிரதியமைச்சர் வி.முரளிதரன், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கு.சுகுணன், பட்டிருப்பு கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம், மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்தர் எஸ்.ஈஸ்வரன், மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X