2025 ஜூலை 16, புதன்கிழமை

மாபெரும் மென்பந்துக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

Super User   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு இருதயபுரம் கோல்டன் ஈகள் விளையாட்டுக்கழகம் தனது 26 வது ஆண்டை சிறப்பிக்கும் முகமாகவும் மறைந்த கழக உறுப்பினர் புவிராஜா அவர்களின் 10வது ஆண்டை நினைவுகூரும் முகமாகவும் எதிர்வரும் மே மாதம் 14,15,17,18ஆம் திகதிகளில் மாபெரும் மென்பந்துக் கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளை நடாத்த உள்ளனர்.

இதில் அனைத்து  மென்பந்துக் கிரிக்கட் கழகங்களையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மட்டக்களப்பு இருதயபுரம் கோல்டன் ஈகள் விளையாட்டுக்கழகத்தினர் அழைக்கிறார்கள். போட்டியில் கலந்து கொள்ளும் கழகங்கள் மே 5ம் திகதிக்கு முன் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என வேண்டப்படுகிறார்கள்.

போட்டியின் பரிசில்கள்
1ம் இடத்தை பெறும் அணிக்கு புவிராஜா சவால் கிண்ணமும் 1ம் இடத்திற்கான வெற்றிக்கிண்ணமும் ரூபா 25000.00 பணப்பரிசும் வழங்கப்படும்.

2ம் இடத்தை பெறும் அணிக்கு வெற்றிக்கிண்ணமும் ரூபா 10000.00 பணப்பரிசும் வழங்கப்படும்.

3ம் இடத்தை பெறும அணிக்கு வெற்றிக்கிண்ணமும் ரூபா 5000.00 பணப்பரிசும் வழங்கப்படும்.

4ம் இடம் பெறும் அணிக்கு வெற்றிக்கிண்ணம் வழங்கப்படும்.

மேலும் வீரர்களுக்கு பல பரிசில்களும் வழங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புகளுக்கு 0772100851, 0771149969




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .