2025 ஜூலை 16, புதன்கிழமை

மட்டக்களப்பு மேற்கு வலய விளையாட்டுப் போட்டியில் அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம் சம்பியன்

Super User   / 2014 மே 01 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய மட்ட விளையாட்டுப் போட்டியில் அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம் 276 புள்ளிகளைப் பெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ச.சந்திரகுமாரின் ஏற்பாட்டில் வலயக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன் தலைமையில்; மட்டக்களப்பு மேற்கு வலய மட்ட விளையாட்டுப் போட்டி புதன்கிழமை(30) மாலை மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

ஆண்டு ஒன்று முதல் ஆண்டு 13 வரையான பாடசாலைகளுள் 276 புள்ளிகளைப் பெற்று அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம் முதலாமிடத்தினையும் 183 புள்ளிகளைப் பெற்று கன்னன்குடா மகாவித்தியாலயம் இரண்டாமிடத்தையும், 161 பள்ளிகளைப் பெற்று கொக்கட்டிச்சோலை ஆர்.கே.எம்.வித்தியாலயம் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது.

இதே வேளை விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ள பாடசாலைகளுள் 64 புள்ளிகளைப் பெற்று கன்னன்குடா மகாவித்தியாலயம் முதலாமிடத்தையும் 57 புள்ளிகளைப் பெற்று அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம் இரண்டாமிடத்தையும் 53 புள்ளிகளைப் பெற்று கொக்கட்டிச்சோலை ஆர்.கே.எம்.வித்தியாலயம் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது.

ஆண்டு 1 முதல் 11 வரையான பாடசாலைகளுள் 98 புள்ளிகளைப் பெற்று கித்துள் ஸ்ரீ கிருஸ்ணா வித்தியாலயம் முதலாமிடத்தையும் 91 புள்ளிகளைப் பெற்று கடுக்காமுனை வாணி வித்தியாலயம் இரண்டாமிடத்தையும் 81 புள்ளிகளைப் பெற்று பன்சேனை பாரி வித்தியாலயம் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது.

ஆண்டு 1 முதல் 5 வரையான பாடசாலைகளுள் 25 புள்ளிகளைப் பெற்று மகிழவெட்டுவான் கந்தப்போடி வித்தியாலயம் முதலாமிடத்தையும் 10 புள்ளிகளைப் பெற்று நரிப்புல்தோட்டம் நடேஸ்வரா வித்தியாலயம் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளது.

இப் போட்டியில் மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் வங்கி முகாமையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.




 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .