2025 ஜூலை 16, புதன்கிழமை

கிண்ணியா பிரதேச செயல கால்பந்தபட்ட அணி சம்பியன்

Menaka Mookandi   / 2014 மே 04 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை மாவட்ட பிரதேச செயலக விளையாட்டு  கழகங்களுக்கிடையே நடைபெற்ற கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் கிண்ணியா பிரதேச செயல கால்பந்தபட்ட அணி 2014ஆம் ஆண்டுக்கான மாவட்ட சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை (04) திருகோணமலை, ஏகாம்பரம் விளையாட்டரங்கில் அரை இறுதிப் போட்டியும் இறுதிப் போட்டியும் நடைபெற்றது.

அரையிறுதிப் போட்டியில் கிண்ணியா பிரதேச அணி குச்சவெளி பிரதேச அணியை எதிர்த்தாடி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற கிண்ணியா அணி, திருகோணமலை பட்டணமும் சூழுலும் பிரதேச செயலக அணியை எதிர்த்தாடியது.

இறுதிவரை மிகவும் விறு விறுப்பாக நடந்துகொண்ட இந்தப் போட்டியில் எந்த அணியுமே கோல் போட்டு வெற்றி பெறாததால் பெனால்டி உதை மூலம் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. இதன்படி கிண்ணியா பிரதேச செயலக அணி 3:1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் ஆனது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .