2025 ஜூலை 16, புதன்கிழமை

இணுவில் கலையொளிக் கழகம் சம்பியன்

Super User   / 2014 மே 05 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


வலி.தெற்கு (உடுவில்) பிரNதுச செயலாளர் பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் இணுவில் கலையொளி விளையாட்டுக் கழகம் 57 புள்ளிகளைப் பெற்று பிரதேச சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

உடுவில் பிரதேச செயலகத்;தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான தடகள விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப்போட்டிகளும், பரிசளிப்பு நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (04) சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் மு.நந்தகோபாலன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது,

முதலில் கால்பந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் ஏழாலை மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டக்கழக அணியினை எதிர்த்து தாவடி காளியம்பாள் விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன.

இதில் ஏழாலை மயிலங்காடு ஞானமுருகன் அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது, தொடர்ந்து, இறுதி சுற்றுக்கள் நடைபெற்றது,

அனைத்து போட்டிகளின் அடிப்படையில் 57 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட இணுவில் கலையொளி விளையாட்டுக் கழகம் முதலிடத்தினையும், 24 புள்ளிகளைப் பெற்ற மல்லாகம் கோட்டைக்காடு ஸ்ரீமுருகன் விளையாட்டுக் கழக அணி இரண்டாமிடத்தினையும், 21 புள்ளிகளைப் பெற்ற இணுவில் இந்து விளையாட்டுக்கழக அணி மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டன.

வெற்றிபெற்ற வீரர்கள் மற்றும் அணிகளுக்கான பரிசில்களையும் கேடயங்களையும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் வழங்கிவைத்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .