2025 ஜூலை 16, புதன்கிழமை

யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் ஆரம்பம்

Kanagaraj   / 2014 மே 10 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}



-  சொர்ணகுமார் சொரூபன், நா.நவரத்தினராசா 


யுவ பிரண்ட் பவுண்டேஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டிலான யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் போட்டிகள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை (10) காலை முதல் ஆரம்பமாகியுள்ளது.

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 18 துடுப்பாட்ட அணிகள் பங்குபற்றவுள்ளதுடன், அவை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

இன்றைய ஆரம்ப நிகழ்வுகளினை வடமாகாண சபைத் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் ஆரம்பித்து வைத்தார்.

யாழ்ப்பாணம் பிறிமியர் லீக்கின் ஏ பிரிவில் கொக்குவில் மத்திய சனசமூக நிலையம், ஸ்ரான்லி, ஸ்கந்தா ஸ்ரார்ஸ், ஸ்ரீ காமாட்சி, மானிப்பாய் பரிஷ; ஆகிய அணிகளும், பி பிரிவில் ஜொலிஸ்ரார்ஸ், கிறாஸ்கோப்பர்ஸ், மூளாய் விக்டோரி, திருநெல்வேலி, யூனியன் ஆகிய அணிகளும், சி பிரிவில் சென்றலைட்ஸ், ஜொனியன்ஸ், நியு ஸ்ரார்ஸ், அரியாலை மத்தி ஆகிய அணிகளும் டி பிரிவில் சென்ரல், பற்றீசியன், திருநெல்வெலி வை.எம்.எச்.ஏ, யங்ஸ்ரார்ஸ் ஆகிய அணிகளும் மோதவுள்ளன.





 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .