2025 நவம்பர் 19, புதன்கிழமை

கிழக்கின் போர் ஒத்திவைப்பு

Kanagaraj   / 2014 மே 10 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை ஸ்ரீ கோணுஸ்வரா இந்துக் கல்லூரிக்கும் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாயலயத்திற்கும் இடையே  வருடாந்தம் நடைபெறும் கிழக்கின் போர் என வர்ணிக்கப்படும் 21 ஆவது பொன் அணிகளின் சமர் 21 ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்போட்டி ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி  மைதானத்தில் 15 ஆம் திகதி திங்கட்கிழமை நடத்தப்படவிருந்தது.  கடந்த சில தினங்களாக  பெய்து வரும் மழை காரணமாகவே   இப்போட்டியை ஒத்திவைத்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

1993 ஆம் ஆண்டு திருகோணமலையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இத் தொடர் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் மாறி மாறி வருடாந்தம்  நடத்தப்பட்டு வருகின்றது.

இது வரை நடைபெற்ற 20 போட்டிகளில்  12 தடவைகள் திருகோணமலை ஸ்ரீ கோணுஸ்வரா இந்துக் கல்லூரியும். 8 தடவைகள் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயமும் வெற்றி பெற்றுள்ளன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X