2025 ஜூலை 16, புதன்கிழமை

லோட்டஸ் விளையாட்டுக்கழகம் சம்பியன்

Super User   / 2014 மே 11 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


யாழ். கூழாவடி இராணு முகாம் இராணுவத்தினர் மென்பந்தாட்டத் துடுப்பாட்டக் கழகங்களுக்கிடையில் நடத்திய 15 பந்துபரிமாற்றங்கள் கொண்ட சுற்றுப்போட்டியில் ஆறுகால்மடம் லோட்டஸ் விளையாட்டுக்கழகம் சம்பியனாகியது.

மேற்படி சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி சனிக்கிழமை (10) மானிப்பாய் செல்லமுத்து மைதானத்தில் இடம்பெற்றது.

இறுதிப்போட்டியில் ஆனைக்கோட்டை யூனியன் அணியினை எதிர்த்து லோட்;டஸ் அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய யூனியன் அணி 15 பந்துபரிமாற்றங்களில் 5 இலக்குகளை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றது.

116 ஓட்டங்கள் பெற்றால் வெற்றியென்ற நிலையில் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய லோட்டஸ் அணி 14.1 பந்துபரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் எஸ்.சர்வன் 42 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

வெற்றிபெற்ற வீரர்கள், அணிகளுக்கான கேடயங்களை கூழாவடி இராணுவ முகாம் பொறுப்பதிகாரி வழங்கினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .