2025 ஜூலை 16, புதன்கிழமை

மூதூர் வெஸ்ற்ரேர்ன் வொரியர்ஸ் சம்பியன்

Super User   / 2014 மே 11 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய பி பிரிவு  மட்டுப்படுத்த்பட்ட பந்துப்பரிமாற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மூதூர் வெஸ்ற்ரேர்ன் வொரியர்ஸ் கழகம் சம்பியனானது.

ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் ஞரியற்றுக்கிழமை (11) இப்போட்டி நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற  வெஸ்ற்ரேர்ன் வொரியர்ஸ் கழகம் முதலில் துடுப்பாடினர்.

நிர்ணயிக்கப்பட்ட 40 பந்து பரிமாற்றங்கள் கொண்ட இறுதிப் போட்டியில்  35.3 பந்து பரிமற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

அஜித் 61 பந்துகளுக்கு முகம் கொடுத்து  39 ஓட்டங்களையும், சப்றாஸ் 9 பந்துகளுக்கு 27 ஓட்டங்களையும் பெற்றுக் கொடத்தனர்.

பந்து வீச்சில் யங் எனிமி கழகத்தின்சார்பில் ரூபன்  40 ஓட்டங்களுக்கு 4 இலக்குகளையும், காண்டீபன் 33 ஓட்டங்களுக்கு 3 இலக்குகளையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு களம் புகுந்த யங் எனிமி விளையாட்டுக் கழகத்தினர்  38.3 பந்து பரிமாற்றங்களில் சகல இலங்குகளையும் இழந்து 178 ஓட்டங்களை மாத்தரமே பெற்றுக் கொண்டனர்.

இதன் மூலம் மூதூர் வெஸ்ற்ரேர்ன் வொரியர்ஸ் கழகத்தின் 14 ஓட்டங்களால் யங் எனிமி விளையாட்டுக்கழகததை வெற்றி கொண்டு சம்பியனாகினர்.
 
திருகோணமலை பாட்லீற் கம்பனி முகாமையாளர் சு.ஜெயசங்கர் யங் எனிமி விளையாட்டுக் கழத்திற்கும். திருகோணமலை நகர சபை தலைவர் க.செல்வராசா சம்பியன் கழகத்திற்கும் வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.

இப்போட்டியில் மூதூர் வெஸ்ற்ரேர்ன் வொரியர்ஸ் கழகத்தைச் சேர்ந்த எம்.ரி.முஜீஸ் போட்டித் தொடர் நாயகனாகவும், மு.அஜீத் போட்டி நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


இப்புhட்டியில் சம்பியனானதைத் தொடர்ந்து மூதூர வெஸ்ற்ரேர்ன் வொரியர்ஸ் கழகத்தினர் பிரிவு ஒன்றுக்கு தரம் உயர்த்தப்பட்டனர். இதன் மூலம்  இம்மாதம் திருகுhணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்த உள்ள  கழகங்களுக்கு இடையிலான  50 பந்து பரிமாற்றம் கொண்ட பிரிவு ஒன்று சுற்றுப்போட்டியில் பங்கு கொள்ளும் தகைமையைப் பெற்றுள்ளனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .