2025 நவம்பர் 19, புதன்கிழமை

சிநேகபூர்வ போட்டியில் யாழ்.பல்கலை அணி வெற்றி

Super User   / 2014 மே 13 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணிக்கும் ராஜரட்டைப் பல்கலைக்கழக அணிக்கும் இடையில் நடைபெற்ற சிநேகபூர்வ துடுப்பாட்டப் போட்டியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி 70 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

40 பந்துபரிமாற்றங்கள் கொண்ட போட்டியாக நடைபெற்ற மேற்படி போட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி 40 பந்துபரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் எஸ்.விதுஸன் 51, ஆர்.அச்சுதன் 46, ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ராஜரட்டை அணி சார்பாக நயனஜித், விக்னேஸ்வரன் தலா 3 இலக்குகளை வீழ்த்தினர்.

239 ஓட்டங்கள் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ராஜரட்டை அணி 38.4 பந்துபரிமாற்றங்களில் 168 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் ஹெட்டியாராட்சி 54, ஹரணசேன 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி சார்பாக ஆர்.அச்சுதன் 5 இலக்குகளைக் கைப்பற்றினார்.

இந்தச் சிநேகபூர்வப் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரராக ஹெட்டியாராட்சியும் (ராஜரட்டை), சிறந்த பந்துவீச்சாளராக ஆர்.அச்சுதனும் (யாழ்ப்பாணம்), சிறந்த களத்தடுப்பாளராக எஸ்.வைகுந்தன் (யாழ்ப்பாணம்), ஆட்டநாயகனாக ஆர்.அச்சுதனும் (யாழப்;பாணம்) தெரிவு செய்யப்பட்டனர்.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X