2025 நவம்பர் 19, புதன்கிழமை

மகாத்மா விளையாட்டுக்கழகத்தின் விளையாட்டுப் போட்டி

Super User   / 2014 மே 14 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன் 


நெல்லியடி மகாத்மா விளையாட்டுக் கழகத்தின் 40 ஆவது ஆண்டு விளையாட்டுப்போட்டி இன்று புதன்கிழமை (14) கழகத்தின் முன்றலில் இடம்பெற்றது.

கழகத்தலைவர் ரூபன்பொன்னையா ஜனகன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் சுமந்திரன் கலந்துகொண்டார்.

இவ்விளையாட்டு நிகழ்வில் பலூன் உடைத்தல், ஓட்டங்கள், மா ஊதி காசு எடுத்தல், தடைதாண்டல், படம் கீறுதல் உள்ளிட்ட விளையாட்டுக்கள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், நெல்லியடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம்.டபிள்யு.பி.கங்கார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X