2025 ஜூலை 16, புதன்கிழமை

எட்டு இலக்குகளால் சென்ரல் அணி வெற்றி

Super User   / 2014 மே 14 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


- குணசேகரன் சுரேன் 


யாழ்ப்பாணப் பிறிமியர் லீக் போட்டியில் இன்று புதன்கிழமை (14) நடைபெற்ற போட்டியொன்றில் சென்ரல் விளையாட்டுக்கழகம் 8 இலக்குகளால் வெற்றிபெற்றது.

யுவ பிரண்ட்ஸ் பவுண்டேஸன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பிறிமியர் லீக்கின் இரண்டாவது வருடப் போட்டிகள் கடந்த 10 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 18 துடுப்பாட்ட அணிகள் பங்குபற்றும் இந்த இருபது – 20 துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியில் இன்று புதன்கிழமை (14) இடம்பெற்ற ஆட்டத்தில் சென்ரல் விளையாட்டுக்கழக அணியினை எதிர்த்து யங்ஸ்ரார்ஸ் விளையாட்டுக்கழக அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய யங்ஸ்ரார்ஸ் அணி 20 பந்துபரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஏ.சதீஸ் 37, ஆர்.இராஜாராம் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சென்ரல் அணி சார்பாக, எஸ்.சுபதீஸ், வி.றஜீவ்குமார் தலா 2 இலக்குகளைக் கைப்பற்றினார்கள்.

தொடர்ந்து 122 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சென்ரல் அணி, 15 பந்துபரிமாற்றங்களில் 2 இலக்குளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் எஸ்.சுதர்சன் யு.கலிஸ்ரன் ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 42, 31 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக எஸ்.சுதர்சன் தெரிவு செய்யப்பட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .