2025 ஜூலை 16, புதன்கிழமை

யாழ்.மாவட்ட இருபது பேர் அணி தெரிவு

Kogilavani   / 2014 மே 16 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன் 

வடமத்திய மாகாண துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் மாவட்டங்களுக்கிடையிலான 12 பந்துபரிமாற்றங்கள் மட்டுப்படுத்தப்பட்ட துடுப்பாட்டப் சுற்றுப் போட்டியில் பங்குபற்றுவதற்காக யாழ்.மாவட்டக் கழகங்களிலிருந்து 20 வீரர்களைத் தெரிவு செய்துள்ளதாக யாழ்.மாவட்ட துடுப்பாட்டச் சங்கச் செயலாளர் எஸ்.விமலதாஸ் வியாழக்கிழமை (15) தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலுள்ள மாவட்டங்களின் துடுப்பாட்ட அணிகளுடன் விளையாடுவதற்கென 20 பேர் கொண்ட யாழ்.மாவட்டத் துடுப்பாட்ட அணி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேற்படி போட்டிகள் தம்புளளையில் எதிர்வரும் 31ஆம் மற்றும் ஜுன் 1 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனடிப்படையில், எஸ்.வினோத் (மானிப்பாய் பரிஷ்;), ஏ.அன்புஜன் (ஜொனியன்ஸ்), பி.பத்மமயூரன் (பற்றீசியின்), வி.மணிவண்ணன் (ஜொலிஸ்டார்ஸ்), வி.விதுபாலா (பல்கலைக்கழகம்), எம்.சந்திரகுமார் (ஜொலிஸ்டார்ஸ்), கே.உதயசபேசன் (ஸ்ரான்லி), டபிள்யு.சபேசன் (மானிப்பாய் பரிஷ்), என்.காந்தசீலன் (கிறாஸ்கோப்பர்ஸ்), பி.நிதர்ஷன் (மானிப்பாய் பரிஷ்), ரி.செந்தூரன் (விக்டோரியா), வி.வாமணன் (ஜொலிஸ்ரார்ஸ்), ஏ.எம்.நோபேர்ட் (பற்றீசியன்), ஏ.சஞ்சயன் (ஜொனியன்ஸ்), ஏ.வி.துசாந்த (ஜொனியன்;ஸ்), எல்.ஆதித்தன் (கொக்குவில் சி.சி.சி), கே.சிலோஜன் (கொக்குவில் சி.சி.சி), எஸ்.தவீந்தன் (பல்கலைக்கழகம்), எஸ்.விஸ்ணுராம் (பல்கலைக்கழகம்), பி.பிருந்தாபன் (ஜொனியன்ஸ்) ஆகிய 20 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .