2025 ஜூலை 16, புதன்கிழமை

ஆட்டம் வெற்றி தோல்வி இன்றி சமநிலையில்

Kanagaraj   / 2014 மே 17 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக்  ஏற்பாடு செய்துள்ள 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான புதிய  கால்ப்பந்தாட்ட தொடரின் முதலாவது  ஆட்டம் வெற்றி தோல்வி  இன்றி  சமநிலையில்  நிறைவடைந்தது.

இத்தொடரின் முதலாவது  ஆட்டம்  வெள்ளிக்கிழமை (16) புத்தளம் சாகிறா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.  கால்ப்பந்தாட்ட ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்ற புத்தளம் விம்பிள்டன் அணியும், லிவர்பூல் அணியும் இந்த  புதிய தொடரில் முதலாவது ஆட்டத்தில் களம் இறங்கின.

கால்ப்பந்தாட்ட மைதானங்களில் கடந்த காலங்களில் தமது திறமைகளை வெளிப்படுத்திய முன்னாள் வீரர்கள்  இந்த  புதிய தொடரில் களம் இறங்கி தமது அபார திறமைகளை வெளிப்படுத்தினர். விம்பிள்டன் அணியில், முன்னாள் சௌண்டஸ் அணியின் முன் கள வீரர் எம்.நியாஸ் உள்வாங்கப்பட்டிருந்தார். அதேபோல் லிவர்பூல் அணியில், பல கால்ப்பந்தாட்ட அணிகளுக்கு பயிற்சியாளராக கடமையாற்றிய எம்.எச்.எம்.நஜீப் உள்வாங்கப்பட்டிருந்தார்.

விம்பிள்டன் அணியை அதன் ஸ்தாபகரும், பயிற்றுவிப்பாளருமான வைத்தியர் ஏ.எச்.எம்.நாளிரும், லிவர்பூல் அணியை அதன் தலைவர் ஏ.எம்.சமானும் வழி  நடாத்தினர்.

மிகவும் விறு விறுப்பாகவும் அதே வேளை சுவாரஸ்யமாகவும் நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் எவ்வித கோல்களையும் பெறாத நிலையில் போட்டி  சமநிலையில் நிறைவடைந்ததோடு இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை  பெற்றுக்கொண்டன.

போட்டிக்கு நடுவர்களாக எம்.எஸ். எம். நௌபி, எம்.எஸ்.எம்.ஜிப்ரி, எம்.ஆர்.எம்.அம்ஜத் ஆகியோர் கடமையாற்றினர்.

இந்த போட்டி தொடரானது புள்ளிகள் அடிப்படையில் இடம்பெற்றாலும் அதி கூடிய  புள்ளிகளை பெறும் இரு அணிகள் இறுதி போட்டியில் களம்  இறங்கும். புத்தளம் விம்பிள்டன், லிவர்பூல், டரிபல் செவன், யாழ் முஸ்லிம்  யுனைட்டட் ஆகிய நான்கு அணிகள் இத்தொடரில் போட்டியிடுகின்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .