2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இரண்டாவது ஆட்ட வெற்றி ட்ரிபல் செவன் அணிவசமானது

Super User   / 2014 மே 18 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக் நடாத்தும் 35 வயதுக்கு மேட்பட்டவர்களுக்கான கால்ப்பந்தாட்ட தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் புத்தளம் ட்ரிபல் செவன் அணி  யுனைட்டட் அணியை 03 : 02 கோல்களினால் வெற்றி பெற்று 03 புள்ளிகளை பெற்றுக்கொண்டது.

இந்த ஆட்டம் சனிக்கிழமை (17) மாலை புத்தளம் சாகிறா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

யாழ் முஸ்லிம் யுனைட்டட் அணிக்காக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வதியும் யாழ் முஸ்லிம் அணியின் முன்னாள் வீரர்கள் பலர் புத்தளம் வருகை தந்து ஆட்டத்தில் கலந்து கொண்டனர். குறிப்பாக முன்னாள் சாதனை வீரர்களான எம்.சலீம், எம்.எம்.ஜான்சின்  உள்ளிட்ட  பழைய வீரர்களையும் காணக்கூடியதாக இருந்தது.

ட்ரிபல்  செவன் அணியை பொறுத்தளவில் அந்த அணியின் வீரர்கள் கடந்த காலங்களில் பெரிதாக எதனையும்  சாதித்ததில்லை. ஆனால் மாறாக இந்த 35 வயதுக்கு மேட்பட்டவர்களுக்கான தொடரில், காலம் கடந்து ஞானம் பிறந்தது போல அதன் முன்னாள் வீரர்கள் தமது திறமைகளை வெளிக்காட்டி வெற்றி வாகை சூடினர்.

போட்டிக்கு பிரதம  நடுவராக புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரியும், புத்தளம் லீக்கின் மத்தியஸ்தர் குழு தலைவருமான பீ. எம். ஹிஷாம் சுமார் ஐந்து வருட காலங்களுக்கு பிறகு  களம் இறங்கினார், துணை நடுவர்களாக ஏ.ஏ.எம்.கியாஸ், எம்.எம்.சிபான் ஆகியோர் கடமையாற்றினர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .