2025 நவம்பர் 19, புதன்கிழமை

கிழக்கு மாகாணத்திற்கான ஜுடோ பயிற்சி முகாம்

Super User   / 2014 மே 18 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}




-எம்.எஸ்.எம்.நூர்தீன்


கிழக்கு மாகாணத்தில் ஜுடோ விளையாட்டினை அறிமுகப்படுத்தும் பொருட்டு மட்டக்களப்பில் மாணவர்களுக்கான ஜுடோ பயிற்சி முகாம் சனிக்கிழமை (17) மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம்இ விளையாட்டு அபிவிருத்த திணைக்களம்இ தேசிய இளைஞர் சேவைகள் மண்றம் ஆகியவற்றின் அனுசரணையுடன் இந்த ஜுடோ பயற்சி முகாம் நடைபெற்றது.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சம்மேளன தலைவர் வி.எஸ்.சுஜான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப வைபவத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம இணைப்பாளர் அருன்தம்பிமுத்து மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன்இ மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.தவராஜாஇ தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.றைநறூஸ்இ இலங்கை ஜுடோ சம்மேளனத்தின் செயலாளர் மேஜர் தரிந்து வீரசிங்கஇ மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்வரன் உட்பட முக்கியஸ்த்தர்கள் விளையாட்டு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஜுடோ பயிற்சி முகாமில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலுமுள்ள நூறு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 
இவர்களுக்கான ஜுடோ பயிற்சியினை இலங்கை ஜுடோ சம்மேளனத்தின் செயலாளர் மேஜர் தரிந்து வீரசிங்க மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட விiளாயட்டு உத்தியேகாத்தர் பாலித வனிகரட்ன மற்றும் ஜுடோ விளையாட்டு வீரர்கள் இணைந்து நடாத்தினர்.
 
அதே போன்று கிழக்கு மாகாணத்திற்கான ஜுடோ விளையாட்டு சங்கமும் இதன் போது அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது. சங்கத்தின் தலைவராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம இணைப்பாளர் அருன்தம்பிமுத்துவும் செயலாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சம்மேளன தலைவர் வி.எஸ்.சுஜான்வும்  தெரிவு செய்யப்பட்டனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X