2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

போராடி வென்றது நுவரெலியா ரெட்வின்ஸ்

Kanagaraj   / 2014 மே 20 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு


நுவரெலியா கால்பந்தாட்ட  சங்கம் ஏற்பாடு செய்திருந்த 'இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் கிண்ணத்தை' நீண்ட போராட்டத்துக்கு மத்தியில் நுவரெலியா ரெட்வின்ஸ் விளையாட்டுக் கழகம் கைப்பற்றியது.

இப் போட்டி நுவரெலியா மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் நேற்று(19) நடைபெற்றது. இப் போட்டியில் நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 16 கழகங்கள் பங்குபற்றின.

நுவரெலியா யங்பேட்ஸ் விளையாட்டுக் கழகமும் நுவரெலியா ரெட்வின்ஸ் விளையாட்டுக் கழகமும் இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் பங்குபற்றின.

யங்பேட்ஸ் கழகம் போட்டியின் முதல் பாதியில் ஒரு கோலை பெற்று போட்டியை தன்வசம் வைத்திருந்தாலும் இரண்டாம் பாதியில் ரெட்வின்ஸ் விளையாட்டுக் கழக வீரர்கள் சிறப்பாக விளையாடி ஒரு கோளை பெற்று போட்டியை சமன் செய்தனர்.

இறுதியில் பெனால்டி முறையில் நுவரெலியா ரெட்வின்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

13 வருடங்களுக்கு பின்பு உதைபந்தாட்ட இறுதிப் போட்டி ஒன்றில் நுவரெலியா யங்பேட்ஸ் விளையாட்டுக் கழகமும் நுவரெலியா ரெட்வின்ஸ் விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .