2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தெல்லிப்பழை கோட்டம் சம்பியனாகியது

Super User   / 2014 மே 20 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


வலிகாமம் கல்வி வலயப் பாடசாலை வீர, வீராங்கனைகளுக்கிடையில் இடம்பெற்ற விளையாட்டுப்போட்டியில் 439 புள்ளிகள் பெற்று தெல்லிப்பழை கோட்டம் முதலிடத்தினைப் பெற்றுக்கொண்டது.

மேற்படி விளையாட்டுப்போட்டியின் இறுதி நிகழ்வுகளும் பரிசளிப்பு விழாவும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் திங்கட்கிழமை (19) இடம்பெற்றது.

இதில் பெரு விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகள் அனைத்திலும் மொத்தப் புள்ளிகள் அடிப்படையில் தெல்லிப்பழைக் கோட்டம் 439 புள்ளிகள் பெற்று முதலிடத்தினைப் பெற்றது.

இரண்டாமிடத்தினை 415 புள்ளிகள் பெற்ற சண்டிலிப்பாய் கோட்டமும், மூன்றாமிடத்தினை 276 புள்ளிகள் பெற்ற சங்கானைக் கல்விக் கோட்டமும், நான்காமிடத்தினை 183 புள்ளிகள் பெற்ற உடுவில் கல்விக் கோட்டமும் பெற்றுக்கொண்டன.

வெற்றிபெற்ற கோட்டங்களிற்கான கேடயங்களை வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா கோட்டக்கல்விப் பணிப்பாளர்களிடம்  வழங்கிவைத்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .